முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் சோனியா - ஸ்டாலின் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி சென்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் வரும் 16-ம் தேதி நடக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது,கனிமொழி, ஆ. ராசா, ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு உடன் இருந்தனர்.

சந்திப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டாலின் மற்றும் தி.மு.க. மூத்த தலைவர்கள், டெல்லியில் சோனியாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். இந்த பேச்சுவார்த்தையை தொடரவும், கூட்டணியை பலப்படுத்தவும் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அதில் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து