முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

சன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான, உலக அழகி போட்டிக்கு, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 118 இளம்பெண்கள் போட்டியிட்டனர். இதில், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் பங்கேற்றார். அண்டை நாடான, சீனாவின் சன்யா நகரில் உலக அழகிக்கான இறுதிப் போட்டி  நடந்தது. இதில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் 68-வது உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, 2017-ல், உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மானுஷி சில்லார் கிரீடம் அணிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து