முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால் : மத்தியப் பிரதேச சட்ட சபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌஹான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச சட்ட சபை தேர்தல் குறித்து பல்வேறு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள  கருத்துக்கணிப்புகளில், பா.ஜ.க-காங்கிரஸ் இடையே இழுபறி ஏற்படும் என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில், தாடியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பிதாம்பரா பீடம் கோயிலுக்கு சிவ்ராஜ் சிங் சௌஹான்  வழிபாடு நடத்த வந்தார். அவரிடம் வாக்கு கணிப்புகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

நானே மிகப்பெரிய வாக்கு கணிப்பாளர் ஆவேன். பொதுமக்கள் மத்தியிலேயே இப்போதும் நான் இருக்கிறேன். அதை வைத்து இதை தெரிவிக்கிறேன். மத்தியப் பிரதேச சட்ட சபை தேர்தலில், இம்முறை பா.ஜ.க 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.

மத்தியப் பிரதேசத்தில் அனைத்து சமூக மக்களின் ஆதரவும் பா.ஜ.கவுக்கு உள்ளது. ஆதலால், தேர்தலில் பா.ஜ.கவுக்கு வெற்றி உறுதி.

மத்தியப் பிரதேச மக்களின் நலனை வேண்டி, பிதம்பரா கோயிலில் வழிபாடு நடத்த வந்துள்ளேன் என்றார் சிவ்ராஜ் சிங் சௌஹான்.

மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சௌஹான் 3 முறை பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இந்தத் தேர்தலிலும் சிவ்ராஜ் சிங் சௌஹானையே முன்னிறுத்தி பா.ஜ.க போட்டியிட்டது.

மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை 11ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலுக்குள் மாநிலத்தில் ஆட்சியமைக்க போவது யார் என்பது தெரிந்துவிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து