முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவருமான சோனியாகாந்தி, நேற்று தனது 72-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

திருமதி சோனியா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுள் உடன், ஆரோக்கியமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து