முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே நடந்த சம்பவம் வேடிக்கையாக அமைந்துள்ளது.

அடிலெய்டின் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்ற ரீதியில் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறது.

இந்நிலையில், இந்திய அணி 2-வது இன்னிங்ஸை முடித்துப் பந்து வீச வந்தது. ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றியவுடன் தேநீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது, அனைவரும் அஸ்வினுக்கு கைகொடுத்து பாராட்டு தெரிவித்தனர். ரோஹித் சர்மாவும் அஸ்வினுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தப் பின்னால் ஓடிச் சென்றார். ஆனால்,ரோஹித் சர்மாவைக் கவனிக்காமல் அஸ்வின் சென்றதால் ரோஹித் சர்மா கை கொடுக்காமல் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார். இந்தக் காட்சி வீடியோவில் ஒளிபரப்பானது. ஆனால், ரோஹித் சர்மாவைக் கண்டுகொள்ளாமல் சென்றதற்கு முக்கியக் காரணம் அஸ்வின் யாருடனோ பேசிக்கொண்டே வந்ததால் ரோஹித் சர்மாவைப் பார்க்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தால் அஸ்வினுக்கு கை கொடுக்காமல் ரோஹித் சர்மா திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து