முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் களமிறங்குகிறேனா? இந்திய வீரர் காம்பீர் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் தான் அரசியலில் களமிறங்கப் போவதில்லை என்று தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் அரசியலில் களமிறங்கப்போவதாக வதந்திகள் கிளம்பியது. இந்நிலையில், அவர் அனைத்து ரக கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். இதனால், கம்பீர் அரசியல் பிரவேசம் குறித்தான வதந்திகள் வீரயம் பெற்றது. இந்நிலையில், அரசியல் மற்றும் ஓய்வுக்குப் பிறகு தனது எதிர்காலம் குறித்தான கேள்விகளுக்கு கௌதம் காம்பீர் பதிலளித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

நான் அரசியலில் களமிறங்கப் போவதில்லை. இதுதொடர்பான வதந்திகளை நானும் கேட்டேன். ஒருவேலை நான் சமூக பிரச்னைகளை கையில் எடுப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த நாட்டின் ஒரு குடிமகனாக சமூக பிரச்னைகளை கையில் எடுப்பது எனது உரிமையாகும். அதனால் தான் நான் அரசியலில் களமிறங்கப் போகிறேன் என்ற வதந்திகள் கிளம்பியிருக்கலாம். ஆனால், அப்படி ஒன்றும் இல்லை. அரசியல் முற்றிலுமாக வேறு ஒரு துறை. 25 ஆண்டுகளாக நான் ஒன்றும் செய்யவில்லை. அதனால், இனிமேல் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். நிர்வாகம் செய்வதில் நான் மிகவும் நேரடியாக செயல்படுபவன். அதனால், எந்த இடமாக இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு தோன்றவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து