முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்புடன் கருத்து வேறுபாடு: பதவி விலகும் வெள்ளை மாளிகைச் செயலர்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரம் மிக்க செயலர் பதவியிலிருந்து தான் விலக விருப்பதாக ஜான் கெல்லி அறிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்புக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றியதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அதிபர் டிரம்ப்பின் செயலராக இருந்த ரீன்ஸ் ப்ரீபஸ் கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு டிரம்ப்பால் நியமக்கப்பட்டவர் ஜான் கெல்லி.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அந்தப் பொறுப்பை வகித்து வரும் ஜான் கெல்லி, இந்த மாத இறுதிக்குள் பதவி விலக முடிவு செய்திருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தனது பதவியிலிருந்து ஜான் கெல்லி விலகுகிறார். அவர் ஓய்வு பெறுகிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அவர் அதிபரின் செயலர் பதவியிலிருந்து விலகுகிறார் என்பது மட்டும் உறுதி என்றார் அவர். கெல்லிக்கு அடுத்தபடியாக, துணை அதிபர் மைக் பென்ஸின் செயலராக இருந்து வரும் நிக் அயர்ஸ் (36), டிரம்ப்பின் புதிய செயலராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து