முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், சவுதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகியின் இறுதித் தருணங்கள் பதிவான ஆடியோ டேப்பை ஆராய்ந்ததில், அவர் கடைசியாக என்னால் மூச்சு விடமுடியவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் சி.என்.என். தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக பல முறை தொலைபேசிகளில் அறிவுறுத்தப்பட்டிருப்பதும், திட்டமிட்டு மருந்து செலுத்தப்பட்டு இந்த கொலை நடந்திருப்பதையும் ஆடியோ ஆதாரம் விளக்குவதாகவும் அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. அந்த தொலைபேசி அழைப்புகளும் ரியாத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்திருப்பதை துருக்கி உறுதி செய்திருப்பதாகவும் சி.என்.என். தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து