முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை எம்.பி.யாகும் ராம்விலாஸ் பாஸ்வான்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதால் கூடுதல் தொகுதிகளுடன் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு லோக் ஜன சக்தியின் (எல்.ஜே.பி) ராம்விலாஸ் பாஸ்வானுக்கு கிடைக்க உள்ளது.

இது குறித்து பாஸ்வான் கட்சியின் வட்டாரங்கள் கூறும் போது, மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வின் சில மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் இடம் பாஸ்வானுக்கு கிடைக்கும். அவரது ஹாஜிபூர் தொகுதியில் மகன் சிராக் பாஸ்வான் போட்டியிடுவார். சிராகின் ஜமுவாயில் அவரது சித்தப்பாவான பசுபதி குமார் பராஸ் பாஸ்வான் நிறுத்தப்படுவார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து