ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      வர்த்தகம்
Urjit-Patel 2018 12 10

புது டெல்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, வாராக்கடன் பிரச்சினை, ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மத்திய அரசின் தலையீடு மற்றும் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியினை அரசுக்கு கையளித்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக கூறப்பட்டது.

இது குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்க மத்திய நிதித் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு முன்பு உர்ஜித் படேல் கடந்த மாத இறுதியில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது வாராக்கடன் விவகாரம், தன்னிச்சையான அமைப்பான ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் பதில் எதுவும் அளிக்காமல் சமாளித்தார். மேலும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்தார். இதையடுத்து, அடுத்த 10 முதல் 15 தினங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்யுமாறு உர்ஜித் படேலுக்கு நிலைக் குழு அறிவுறுத்தியது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சொந்தக் காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து