முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய வடிவமைப்பில் கூடுதல் வசதியுடன் ரூ.2 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதனை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புப்பணிகள்  மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர்கள் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச்செயலகத்திலிருந்து  காணோலி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.
புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் தரைதளம் மற்றும் முதல்தளம் என இரண்டு தளங்கள் தலா 7,698 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களுக்கான சமூக நலத்திட்டம், பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், ஊராட்சி ஒன்றிய பணிகள் மேற்கொள்வதற்கான 12 அறைகளுடனும்;, கட்டிடத்தின் முதல் தளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களுக்கான திட்டப்பிரிவு, Pஆயுலு வீடு வழங்கும் திட்டம், ஆபுNசுநுபுளு திட்டப்பணிகள், கிராம பஞ்சாயத்து நிர்வாகம், பொறியியல் பிரிவு, கூட்ட அரங்கம் அடங்கிய 10 அறைகளுடனும் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், எரிவூட்டி அமைப்புடன் கூடிய நவீன கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில், பிரிவு அலுவலகங்கள் தனித்தனி கட்டிடங்களில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் அனைத்து பிரிவுகளும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை உள்ளடக்கியே அமைந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் திறக்கப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,   நேரில் சென்று குத்துவிளக்கேற்றிவைத்து கட்டத்தின் அமைப்பினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில்; திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர்;  .மு.சந்திரபிரபா, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், செயற்பொறியாளர்(வளர்ச்சி) ஹசன் இப்ராஹிம், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் செல்வராஜ், உதவிப்பொறியாளர்கள் திருமதி.மாலதி மற்றும் திருமதி.சசிகலா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து