முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டம் வெளிநடப்பு செய்தார் இந்திய தூதர்

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் நாடுகள் வர்த்தக சபை ஆலோசனைக் கூட்டத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதர் வெளிநடப்பு செய்தார்.

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் நாடுகள் சார்பில் 2 ஆண்டுக்கு ஒருமுறை மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதன் தொடர்ச்சியாக, இந்த மாநாட்டை வங்கதேசம், பூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் புறக்கணித்ததால் சார்க் நாடுகளின் மாநாடு நடைபெறவில்லை.

இந்நிலையில், சார்க் பட்டய தினத்தையொட்டி, சார்க் வர்த்தக சபை ஆலோசனைக் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அமைச்சர் செளதரி முகமது சயீத் பங்கேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் நாட்டிற்கான இந்திய தூதர் சுபம் சிங் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும், இதில் அந்நிய நாடுகளின் தலையீட்டை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. மேலும், பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எந்த ஒரு அமைச்சரையும் அங்கீகரிக்க இந்தியா தயாராக இல்லை என்பதை திட்டவட்டமாக உணர்த்தும் வகையில் அந்தக் கூட்டத்தை இந்தியா புறக்கணித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து