முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள் குறித்து குவால்காம் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் பிரச்னை எழுந்துள்ளது. இரு நிறுவனங்களுமே கலிபோர்னியாவை சேர்ந்தவை. ஐபோன் 6 எஸ், 6 எஸ் பிளஸ், 7, 7 பிளஸ், 8, 8 பிளஸ், எக்ஸ் ஆகியவற்றில் தங்களது பேடன்ட் மென்பொருளை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்துவதாக சீன நீதிமன்றத்தில் குவால்காம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து ஐபோன்களை சீனாவில் விற்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து குவால்காம் நிறுவனத்தின் துணைத் தலைவர் டான் ரோசன்பெர்க் கூறும் போது, ஆப்பிள் நிறுவனம் எங்களின் கண்டுபிடிப்பின் மூலம் வளத்தை பெருக்கிக் கொண்டு வருகிறது. எங்களுக்கு இழப்பீடு தரவும் மறுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து