முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளின் திருமணத்தில் முகேஷ் அம்பானியின் சூப்பர் டான்ஸ்

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

உதய்ப்பூர் : தனது மகள் இஷா அம்பானி திருமணத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி டான்ஸ் ஆடியது நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபரான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிறுவனர் அஜய் பிராமலின் மகனான ஆனந்த் பிரமோலும் காதலித்து வந்தனர்.

பள்ளிக் கால நண்பர்களான இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடந்தது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த விழாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து அம்பானி வீட்டுத் திருமணத்துக்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டன. திருமண நிகழ்ச்சிகள், ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் களைகட்டத் தொடங்கின. திருமணத்தின் ஒருபகுதியாக சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சல்மான் கான், ஷாருக் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு நடனமாடினர். அப்போது நீல நிற சூட் அணிந்து அவர்களுடன் முகேஷ் அம்பானி நடனமாடினார்.  அவரின் நடன அசைவுகளை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவருக்கு டான்ஸ் ஆடத் தெரியவில்லையே என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து