முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. தெலுங்கானாவில் மீண்டும் டி.ஆர்.எஸ் ஆட்சியை கைப்பற்றியது. சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மிசோரம் மாநிலத்தில்

வாக்குகள் எண்ணும்...

தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 5 மாநிலங்களில் சேர்த்து மொத்தமாக 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடும் போட்டி...

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய முதலே மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

மத்தியப்பிரதேசம்....

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 115 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4, சமாஜ்வாதி வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கித்தனர். பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கு யார் ஆட்சியை பிடிப்பார் என்ற இழுபறி நிலையே உள்ளது.

ராஜஸ்தான்...

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 89 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தனர். ஏழு தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 12 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

சத்தீஸ்கர்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 59 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் மூன்று தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தனர்.

மிசோரம்....

மிசோரம் மாநிலத்தில் உள்ள 39 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 1 தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

தெலுங்கானா...

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 118 இடங்களில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர் 19 தொகுதிகளில் வெற்றிபெற்று, 69 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று 15 முன்னிலை வகிக்கிறது.  தெலுங்குதேசம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து