முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதியாரின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜூ பெஞ்சமின் ஆகியோர் பாரதியார் சிலைக்கு அருகே உள்ள அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு விழாவாக...

பாரதியாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், கடம்பூர் ராஜூ, கொறடா எஸ்.ஆர். விஜயகுமார்,  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) இரவீந்திரன், இணை இயக்குநர்கள் துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து