முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி !

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.

இந்தியா வெற்றி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடர்ந்து 3-வது ஆண்டாக அனைத்து விதமான போட்டிகளிலும் 2500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்தப் போட்டியின், பரப்பான கடைசி நாளில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று

சாதனை படைத்தது.

2,500 ரன்களுக்கு...

இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 முன்னிலை வகிக்கிறது. கேப்டன் விராட் கோலிக்கு 2018-ம் ஆண்டு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது. நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார். 2018-ம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று விதமான போட்டிகளிலும் சேர்த்து 2,500 ரன்களுக்கு மேல் அவர் எடுத்துள்ளார்.

3-வது ஆண்டாக...

கோலி, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இதேபோல், 2016, 2017-ம் ஆண்டுகளில் 2,595 மற்றும் 2,818 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில், இந்த சாதனையைப் படைத்த முதல் வீரர் விராட் கோலிதான். இந்த ஆண்டு முடிவதற்குள், இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நிலைவில், அவர் இந்த சாதனையைச் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து