முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்!

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

‘கிங்’ கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் நேற்று முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடினர். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில், கோலிக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான நாளாக நேற்று அமைந்தது.  

முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் இந்த தம்பதியினருக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  விராட் கோலியும் தன்னுடையை காதல் மனைவிக்கு ட்விட்டரில் நெகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். “ஓராண்டு கடந்துவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் நேற்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது. நேரம் வேகமாகச் சென்றுவிட்டது. இந்த நேரத்தில் என்னுடையை நெருக்கமான நண்பர்களுக்கும், என்னுடையை ஆத்ம துணைக்கும் வாழ்த்துக்கள்.” என்று கூறியுள்ளார்.

அதேபோல், அனுஷ்கா பதிவிட்டுள்ள ட்வீட்டில், “இது ஒரு சொர்க்கம். நேரம் போனதை நீங்கள் உணரவில்லை. நல்ல மனிதரை திருணம் செய்யும்போது சொர்க்கமாக இருக்கும்.” என்று கூறியுள்ளார். தற்போது, ஆஸ்திரேலியாவில் இருக்கும் அனுஷ்கா சர்மா அவ்வப்போது மைதானத்திற்கு சென்று இந்திய வீரர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து