முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் பாரபட்சத்துடன் கூகுள் இயங்கவில்லை: சுந்தர் பிச்சை

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் : கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சீனாவில் புதிய தேடுபொறியை துவங்க கூகுள் திட்டமிட்டுள்ளது எனவும், அமெரிக்காவில் அரசியல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாகவும் கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அமெரிக்க பார்லிமெண்ட் விசாரணை குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள சுந்தர் பிச்சை, அரசியல் பாரபட்சத்துடன் கூகுள் செயல்பட்டது இல்லை. அனைத்து விதமான கருத்துக்களையும் பதிவு செய்யும் தளமாகவே கூகுள் இயங்கி வருகிறது.

ஆங்கிலத்தில் முட்டாள் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வருவதற்கு காரணம், வேண்டுமென்றே அப்படியொரு தவறை கூகுள் நிறுவனம் செய்யவில்லை. தற்போதைய சூழலில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு, அதன் அதிகப்படியான பயன்பாடு, மக்களின் பதிவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே தேடுபொறியில் வார்த்தைகளை சேர்த்துள்ளோம். உடனடியாக சீன தேடுபொறியை தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை. வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்கள், பேச்சுக்களை தணிக்கை செய்தே கூகுள் பதிவிடுகிறது. இவ்வாறு சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து