Idhayam Matrimony

8 மாதங்களில் நாட்டின் நேரடி வரி வசூல் ரூ. 6.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு - மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தகவல்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தாண்டு, ஏப்ரல்  - நவம்பர் மாதம் வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, 15.7 சதவீதம் அதிகம். இதே காலத்தில், வரி கணக்கு தாக்கல் செய்தோருக்கு திரும்ப அளிக்கப்பட்ட கூடுதலாக செலுத்திய தொகை 20.8 சதவீதம் அதிகரித்து 1.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் நடப்பு 2018 -- 19-ம் நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக 11.50 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில், மதிப்பீட்டு காலத்தில், நிகர அளவில் 48 சதவீதம் வசூலாகி உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வாயிலாக வசூலிக்கப்பட்ட மொத்த வரி 17.7 சதவீதம் உயர்ந்துள்ளது. தனி நபர் வருமான வரி வசூல் 18.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில், தன் விருப்பத்தின் பேரில் வருவாய் விபரங்களை தெரிவிக்கும் திட்டத்தில் 10,833 கோடி ரூபாய் வசூலானது. இவ்வாறு மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து