முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

அணிகளுக்கான...

அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில், இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி (108) 2-வது இடத்திலும், தென்னாஃப்ரிக்கா அணி (106) 3-வது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியா அணி (102) 5-வது இடத்தில் நீடிக்கிறது.

பேட்ஸ்மேன்கள்....

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், 920 புள்ளிகளுடன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய புஜாரா 846 புள்ளிகள் பெற்று, 5-வது இடத்தில் இருந்து, 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள்...

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், தென்னாஃப்ரிக்காவின் ரபடா முதலிடத்திலும், இந்தியாவின் ஜடேஜா 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர். அடிலெய்ட் டெஸ்டில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், 786 புள்ளிகள் பெற்று 7-வது இடத்திலிருந்து, 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பும்ரா 33-வது இடத்திற்கு முன்னேறி சிறந்த தரவரிசையை பதிவு செய்துள்ளார். அதேபோல், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா (392) இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் (415) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து