முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      சினிமா
Image Unavailable

புதுடெல்லி : 2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா வாரியர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

முதலிடம்

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிடும். இந்நிலையில், 2018-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா வாரியர் முதலிடத்தை பிடித்துள்ளார். ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தின் மாணிக்ய மலராய பூவி என்ற பாடல்  வெளியானது. இந்த பாடலில் பிரியா பிரகாஷ் வாரியர் தனது புருவ அசைவின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அவருக்கு இதுவரை இன்ஸ்டாகிராமில் 6.2 மில்லியன் பேரும், பேஸ்புக்கில் 6.7 லட்சம் பேரும் பின் தொடருபவர்களாக இருக்கிறார்கள்.

2.0. படத்திற்கு 5-ம் இடம்

பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ் 2- வது இடத்தில் உள்ளார். பாடகி சப்னா சவுத்ரி 3-வது இடத்திலும் பிரியங்கா சோப்ரா 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழகத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள 2. o திரைப்படம் 5-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற திரை பிரபலங்களில் திருமணம் குறித்தும் அதிகமாக தேடப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் திருமணம், தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணமும் அதிகமாக தேடப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து