முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயக்கடன் தள்ளுபடியா? மத்திய அமைச்சர் விளக்கம்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய வேளாண் துறை இணையமைச்சர் பர்சோத்தம் ரூபாலா கூறியுள்ளார்.

பரவலான குற்றச்சாட்டு

5 மாநில தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட 5 மாநிலத் தேர்தலின் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் இருந்தாலும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதமே உள்ள நிலையில், தோல்வியில் இருந்து மீண்டுவர புதிய முயற்சிகளை கையாள பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இழந்த செல்வாக்கை மீட்க விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யலாம் என யோசித்து வருவதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்பட்டது.

பரிசீலனையில் இல்லை

இந்நிலையில், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என மக்களவையில் சிவசேனா எம்.பி. பவானா கவுலி படேல் கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் துறை இணையமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, தற்போது வரை விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என விளக்கமளித்தார்.

கடன் சுமையை குறைக்க ஆலோசனை

விவசாய கடன்களைக் குறைப்பதால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும், இத்தகைய சலுகைகள் கடனாளிகளை மேலும் ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடனை திருப்பிச் செலுத்த முன்வரும் விவசாயிகளுக்கு எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தி விடும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாமல், கடன் சுமையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து