முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.டி.வி. தினகரனுக்கு மட்டும் இடமில்லை: அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : தினகரனை தவிர அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  சொந்த நிதியில் இருந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 30 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாகனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். 

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளதே ?

பதில்:- இதுகுறித்து தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அழைப்பது கடமை...

கேள்வி:- அ.ம.மு.க.வில் இருந்து முக்கிய பிரமுகர்கள் மாற்று கட்சியில் சேர்ந்து உள்ளார்களே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அ.தி.மு.க.வுக்கு எப்போதும் ஒரே நிலைபாடு தான் உள்ளது. சமீபத்தில் அ.ம.மு.க.வில் இருந்து வந்தவர்கள் எனது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. வருங்காலங்களிலும் அ.ம.மு.க.வில் இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். தினகரனை தவிர அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அவர்கள் உரிய மரியாதையுடன் அ.தி.மு.க.வில் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியது எங்களது கடமை.

குறை கூறுவது எளிது...

கேள்வி:- கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் அரசின் நிவாரண உதவிகள் சரியாக சென்றடையவில்லை என்று புகார் எழுந்துள்ளதே?

பதில்:- குறை கூறுவது எளிது. நிவாரண பணிகள் வழங்குவது கடினமான பணி என்பது அனைவரும் அறிந்தது. கஜா புயலால் 2 லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 1500-க்கும் மேற்பட்ட மின் மாற்றிகள் சேதம் அடைந்துள்ளது. இதையெல்லாம் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சரி செய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் முழு வீச்சில் குடிநீர் வசதி மற்றும் மின் வினியோகம் சரி செய்யப்பட்டுள்ளது.

1 லட்சம் வீடுகள்...

ஒருசில கிராமங்களில் உள்ள வீடுகள்,  வயல்பகுதியில் இருக்கின்ற வீடுகள்,  தூரமாக இருக்கின்ற வீடுகளுக்கெல்லாம் மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்இணைப்பு அளிப்பதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரணத் தொகையைப் பொறுத்தவரைக்கும், உரியவர்களுக்கு உரிய இழப்பீடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  அதோடு, 'கஜா' புயலினால் வீடு இழந்தவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தருவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
கேள்வி: சிலை கடத்தல் வழக்கில் நீங்கள் மேல்முறையீடு சென்றதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறதே?

பதில்: நான் இன்னும் அதைப் பார்க்கவில்லை. எங்களுடைய வழக்கறிஞர்களிடம் முழு விவரமும் கேட்ட பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து