முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் கோயில் யானை ராமலெட்சுமி புத்துணர்வு முகாம்மிற்கு புறப்பட்டு சென்றது

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

. ராமேசுவரம்-  புத்துணர்வு முகாம்மில் பங்கேற்க செவ்வாய் கிழமை இரவு ராமேசுவரம்  ராமநாதசுவாமி திருக்கோயில்  யானை புறப்பட்டு சென்றன. திருக்கோயிலின் உழியர்களும்,அலுவலர்களும்,மற்றும் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும்,பக்தர்களும் கலந்து கொண்டு யானையை வழியனுப்பி வைத்தனர்.
 இந்து அறநிலையத்துறை சார்பில் திருக்கோயிலில்களில் உள்ள யானைகளின் உடல் ஆரோக்கியத்துக்காக ஆண்டு தோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 48 நாள்கள் நடக்கும் புத்துணர்வு முகாம்  மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனசரணாளயத்தில் நாளை மறுநாள் துவங்கப்படவுள்ளது.அதனையொட்டி   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் யானை ராமலெட்சுமி  புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக புதன் கிழமை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தனர்.அதனை தொடர்ந்து யானையை முகாமிற்கு கலந்து கொள்வதற்காக செல்வதால் கோயிலில் சுவாமி,அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை வழிபாடுகள்  நடைபெற்றது.அதனைதொடர்ந்து யானைக்கு திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் பகுதியில் வைத்து மரியாதை செலுத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அதன் பின்னர் சன்னதி வீதி  வழியாக திருக்கோயில் நிர்வாகிகள் மேளதாலத்துடன் அக்னிதீர்த்தம் கடற்கரைப்பகுதிக்கு  அழைத்து வந்தனர் அங்கு  பக்தர்கள் கோஷங்கள் எழுப்பி  காய்கறி,வாழைப்பழங்கள் போன்ற உணவுகள் யானைக்கு வழங்கினார்கள்.அதனை தொடர்ந்து யானையை லாரி வாகனத்தில் இரவு 9.30 மணிக்கு ஏற்றப்பட்டு அப்பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றன. இந்நிகழ்ச்சியில்  திருக்கோயிலின் இணை ஆணையர் மங்கையர்க்கரசி,உதவிக்கோட்டபொறியாளர் மயில்வாகணன்,கண்காணிப்பாளர் ககாரீன்ராஜ், அலுவலரு கமலநாதன்,ஆகியோர்கள் கலந்து கொண்டனர். யானை ராமலெட்சுமியுடன்  யானை பராமரிப்பு நிர்வாக அலுவலர் செல்லம்,  மற்றும் யானைபாவன் ராமு ஆகியோர்கள் சென்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து