முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அன்டில்லாவில் விமர்சையாக நடந்தது அம்பானி மகள் திருமணம் - அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் பெரும் நட்சத்திரங்கள் திரள வெகு விமர்சையாக மும்பையில் நடைபெற்றது.

கலைகட்டியது நிகழ்வு

தொழிலதிபரும் நாட்டின் முதல் பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமண விழா விமரிசையாக நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் பிரமாண்டமான சொகுசு மாளிகையான அன்டில்லாவில் திருமண நிகழ்வுகள் கலைகட்டின. மணமக்கள் இஷா மற்றும் ஆனந்த் பிரமாலை வாழ்த்த வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிலிருந்து அரசியல் தலைவர்கள், தொழில் துறையினர், திரைப்பட நட்சத்திரங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

பிரபலங்கள் பங்கேற்பு

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலரி கிளின்டன், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஆமிர் கான் என ஏராளமானோர் அன்டில்லாவில் குவிந்தனர். புதுமண தம்பதிகளான ரன்வீர்சிங், தீபிகா படுகோன் ஜோடி மற்றும் பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் கலந்துகொண்டார். தமிழக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் பங்கேற்றார். இதுதவிர முன்னாள் ஜனாதிபதி பிரணப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னவிஸ், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.

சொர்க்கலோகத்தில் திருமணம்

27 அடுக்குகளை கொண்ட அன்டில்லா மாளிகை சொர்க்கலோகம் போல வண்ண விளக்குகளாலும் கண் கவரும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்த மணமக்களை வண்ணமயமாக உடையணிந்த இளைஞர்களும், இளம்பெண்களும் நடனமாடி வரவேற்றனர். மணப்பெண் இஷா இளஞ்சிவப்பு நிற லெஹங்கா ஆடையணிந்து வந்த நிலையில், மணமகளின் தாயான நீடா அம்பானி தங்க இழைகள் பதிக்கப்பட்ட சேலையை அணிந்து காண்போரை பிரமிக்க வைத்தார். திருமணத்தையொட்டி அங்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து