முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பத்தனம்திட்டா கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

144 தடை நீட்டிப்பு

கடந்த மாதம் 16-ம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தையடுத்து நடை திறந்த முதல் நாளில் இருந்தே சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

அங்கு தொடர்ந்து 144 தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.  இந்த நிலையில் 6-வது முறையாக வருகிற 16-ம் தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பத்தனம் திட்டா கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

வருவாய் குறைந்தது

சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு 2 வாரங்களே உள்ள நிலையிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக கோவில் உண்டியல் வருமானம், பிரசாதங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவையும் குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து