முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை மிசோரம் முதல்வராக பதவியேற்கிறார் சோரம்தங்கா

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அய்சால் : மிசோரம் தேர்தலில் பெரும்பான்மையை பிடித்துள்ள மிசோ தேசிய முன்னணி தலைவர் சோரம்தங்கா, நாளை முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவராக தேர்வு

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டசபை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த 2 மணி நேரத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிசோ தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அய்சாலில் நடைபெற்றது. அதில் சட்டமன்றக் கட்சித் தலைவராக சோரம்தங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவியேற்கிறார்

இதையடுத்து அம்மாநில கவர்னரை சந்தித்த அவர் முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட கவர்னர் கும்மண்ணம் ராஜசேகரன் ஆட்சியமைக்க வருமாறு சோரம்தங்கா-வுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஆளுநர் மாளிகையில் நாளை  நண்பகல் 12 மணிக்கு சோரம்தங்கா பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்கு ஒரு இடம்

எனினும், முதலமைச்சருடன் அமைச்சர்கள் பதவியேற்பார்களா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்த மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் பா.ஜ.க. ஓரிடத்திலும் மற்றவர்கள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து