முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஒப்பந்த விவகாரம்: காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க ராஜ்நாத்சிங் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, சர்வதேச அளவில் ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாகப் பேசி, இந்தியாவின் தோற்றத்தை சிதைத்து விட்டார் ராகுல் காந்தி. அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில், ரபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில்,  ரபேல் போர் விமானக் கொள்முதலில் எந்தவிதமான சந்தேகத்துக்கு இடமான விவரங்களும் இல்லை. ஆதலால், விமானக் கொள்முதலுக்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்தத்தீர்ப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,

அரசியல் ஆதாயத்துக்காக ரபேல் போர் விமானக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்கள். நாட்டையே திசைதிருப்ப முயற்சித்தார்கள்.  சர்வதேச அளவில் தேசத்தின் தோற்றத்தைச் சிதைத்தார்கள். காங்கிரஸ் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தால், அதற்குப் பதிலாக பா.ஜ.க. மீதும் போட்டியாக ஏதாவது குற்றச்சாட்டைக் கூறுகிறது. ரபேல் போர் விமானக் கொள்முதலில் காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேசத்தின் தோற்றத்தைச் சிதைக்க கூறப்பட்டவை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாடாளுமன்றத்துக்கு வந்து தான் கூறிய குற்றச்சாட்டுக்கும், கட்சியினர் கூறியதற்கும் மன்னிப்பு கோர வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து