முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பார்லி.யில் கடும் அமளி- இரு அவைகளும் முடங்கின: 17-ம் தேதி வரை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ரபேல் ஒப்பந்த தீர்ப்பால் பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் வரும் 17-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.

ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கேள்வி நேரம் முடிந்ததும், இரு அவைகளிலும் பா.ஜ.க. உறுப்பினர்களும், மற்ற கட்சியினரும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதனால் அமளி ஏற்பட்டது.

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அவதூறு கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி கோஷமிட்டனர். திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்.பி.ஐ., விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பின.

தொடர் அமளி காரணமாக இரு அவைகளிலும் அடுத்தடுத்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு இரு அவைகளும் வரும் 17-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியது முதலே ரபேல் ஒப்பந்தம், மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களால் ஏற்பட்ட அமளியால் நாள்தோறும் இரு அவைகளிலும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து