முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் வாஜ்பாய் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் - மத்திய அரசு வெளியிட திட்டம்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக விரைவில் அவரது உருவம் பதித்த ரூ. 100 நாணயம் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

35 கிராம் எடை கொண்டதாக இருக்கும் இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் படத்துடன் அவரது பெயர் தேவனாகிரி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட உள்ளது. அதற்கு கீழ் வாஜ்பாய் வாழ்ந்த காலத்தை குறிக்கும் வகையில் 1924 - 2018 என பொறிக்கப்பட உள்ளது.

நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் சிங்க முகம் அமைந்துள்ள அசோக சின்னம் பொறிக்கப்பட்டு, அதன் நடுவே சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் பொறிக்கப்பட உள்ளது. வாஜ்பாயின் உருவத்தின் ஒரு புறம் பாரத் எனவும், மறுபுறம் இந்தியா என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட உள்ளது. இதே போன்று சிங்க முகம் பொறிக்கப்பட்ட பக்கத்தின் அதன் அடிப்பகுதியில் ரூ.100 என்ற அடையாளம் பொறிக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து