முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமரை போல் சீதைக்கும் சிலை அமைக்க காங்கிரஸ் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ, ராமரை போல் சீதைக்கும் சிலை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கரன் சிங், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சமீபத்தில், ராமருக்கு 221 மீட்டர் உயர சிலை அமைக்க போவதாக உ.பி. முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரன் சிங், ராமரை போல் சீதையையும் சிலை வைத்து கவுரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக உ.பி. முதல்வருக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், அயோத்தியில் சீதைக்கும் கவுரவம் அளிக்க வேண்டும். சீதையை குறைத்து மதிப்பிடுவது வேதனை அளிக்கிறது. அதனால் அயோத்தியில் ராமரை போன்று சீதைக்கும் சிலை அமைக்க வேண்டும். ராமருக்கு அமைக்கப் போவதாக சிலையின் உயரத்தை குறைத்துக் கொண்டு, அந்த தொகையை கொண்டு ராமருக்கு அருகில் சீதைக்கும் சிலை அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 14 ஆண்டுகள் ராமனை பிரிந்து வசித்ததுடன், ராவணன் கடத்தி சென்ற போது கைதியாகவும் இருந்துள்ளார். அக்னி பிரவேஷத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்த போதும் பல துன்பங்களை அனுபவித்தவர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து