முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு தமிழக அரசு அழைப்பு

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி, சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவுக்கு தலைமை ஏற்க வருமாறு துணை ஜனாதிபதி எம்.வெங்கய்யா நாயுடுவுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்றது.

இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநாட்டின் நிறைவு விழாவுக்குத் தலைமை ஏற்குமாறு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை வியாழக்கிழமை காலை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், தொழில் துறை செயலாளருமான ஆர். ஞானதேசிகன் உடனிருந்தார்.

பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அமைச்சர் எம்.சி. சம்பத் அழைப்பு விடுத்தார். முன்னதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தொழில் துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரையும்  டெல்லியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் சந்தித்து உலகத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறுஅழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து