முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைரலாகும் கோலியின் ‘சூப்பர்மேன்’ கேட்ச்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஹேரிஸ் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர்.

இந்திய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இருவரும் அரைசதம் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். மார்கஸ் ஹேரிஸ் 70 ரன்களிலும், பிஞ்ச் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 5 ரன்னில் உமேஷ் யாதவ் வேகத்தில் வெளியேறினார்.

போட்டியின் 55-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அசுர வேகத்தில் வீசிக்கொண்டிருந்தார். ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலியாவின் ஹேண்ட்கோம்ப் கீப்பருக்கு மேலே தூக்கிய அடிக்க முயற்சித்தார். 2-வது ஸ்லிப்பிற்கு மேலே சென்ற பந்தை, கேப்டன் விராட் கோலி பாய்ந்து கேட்ச் பிடித்தார்.

கோலியின் அட்டகாசமான கேட்ச்சால் ஹேண்ட்கோம்ப் 7 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. விராட் கோலியை சூப்பர் மேன் போல் மாஃபிங் செய்து சிலர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து