முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூகுளில் முட்டாள் என்று தேடினால் டிரம்பின் புகைப்படம் ஏன் வருகிறது? சுந்தர் பிச்சை விளக்கம்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு சுந்தர் பிச்சை பதில் அளித்திருக்கிறார்.

சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜரான சுந்தர் பிச்சை, சீனாவுக்கான சேவைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு விடை அளித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சரமாரிக் கேள்விகளுக்கு சற்றும் பதட்டமடையாமல் பதில் அளித்தார்.

இந்த நிலையில் பல காட்டமான கேள்விகளுக்கு இடையே ஜன நாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ லாப்கிரின் சுந்தர் பிச்சையிடம், அமெரிக்காவில் சமீபத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக முட்டாள் இருக்கிறது . அந்த வார்த்தையை கூகுளில் தேடும்போது ஏன் அதிபர் டிரம்பின் படம் காட்டுவது ஏன்?என்று கேட்டார்.

அதற்கு சுந்தர் பிச்சை பதிலளிக்கும் போது, இதில் கூகுளுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. கூகுளில் நீங்கள் ஒன்றை தேடினால் லட்சணக்கான பயன்பாட்டாளர்கள் அதற்கு எந்த கீ வேர்டை பயன்படுத்துகிறார்களோ அதன் அடிப்படையில்தான் உங்களுக்கான முடிவை காட்டும். சில நேரங்களில் இது பிரபலங்களின் அடிப்படையிலும் முடிவை காட்டலாம்.  எனவே இதற்காக உங்கள் போன் பின்னால் சிறிய நபர் அமர்ந்து கொண்டு நீங்கள் தேடுவதற்கான முடிவை அவர் காட்டுகிறார் என்று அர்த்தமில்லை. உங்கள் தொலை பேசியை கூகுள் உருவாக்குவதில்லையே என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து