சாப்பாடு போட்டவருக்காக மருத்துவமனை வாசலில் காத்துக் கிடக்கும் நாய்கள்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      உலகம்
dogs wait hospital 2018 12 15

பிரசிலியா : பிரேசில் நாட்டில் சீசர் என்ற நபர் தெருவில் போகும் போது அங்கிருக்கும் 4 நாய்களுக்கு சாப்பாடு தருவாராம். என்றைக்காவது அந்த வழியாக சென்றால், அதுவும் அந்த நேரத்தில் கையில் ஏதாவது சாப்பாடு இருந்தால் அந்த தெரு நாய்களுக்கு போடுவாராம். உடனே அந்த 4 நாய்களும் அதை சாப்பிட்டு விட்டு வாலை ஆட்டுமாம்.

இந்த நிலையில் சீசருக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போய் விட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீசர் இப்படி ஆஸ்பத்திரியில் நோயுற்று படுத்து கிடப்பதை இந்த 4 நாய்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அதனால் ஆஸ்பத்திரி வாசற்படிக்கு வந்து 4 நாய்களும் நின்று விட்டன. சீசரை பார்ப்பதற்காக அவை காத்து கிடப்பதை மருத்துவமனை நிர்வாகம் ஆச்சரியத்துடன் பார்த்தது. இப்படியே ஒரு மணி நேரமாக நாய்களும் நின்று கொண்டே இருந்தன.

இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், சீசரை பார்க்க உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள். சீசரால் வளர்க்கப்படாத நாய்கள் இப்படி ஏக்கத்துடன் காத்து நிற்பதை ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர், போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். எந்தவித எதிர்பார்ப்பற்ற பாசமும், புரிதலும் உள்ள தெருநாய்களின் ஏக்கமிகு முகத்தினை கண்டு எல்லோருமே கண்கலங்கி விடுகின்றனர். இந்த போட்டாதான் தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து