முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலைக்கு சமம் என தெரிந்தே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தோம் - ஜம்மு முன்னாள் முதல்வர் மெகபூபா வேதனை

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம் என்று தெரிந்தே கூட்டணி வைத்தோம் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வேதனையுடன் தெரிவித்தார்.

மும்பையில், தனியார் அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பங்கேற்றார். இதையடுத்து அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தால், பிரதமர் மோடி பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சில் ஈடுபடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், உண்மையில், பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்வது என்பது தற்கொலைக்கு சமம் என்று தெரிந்தே அந்த நடவடிக்கையில் இறங்கினேன். எங்களின் கட்சி பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை ஊக்குவித்து வரும் நிலையில், மோடியுடன் அமைக்கும் கூட்டணி பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஆட்சியில் இல்லாத பெரும்பான்மை பலம் மோடிக்கு இருப்பதால், பாகிஸ்தான் மக்களுடனும், ஜம்மு காஷ்மீர் மக்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, என்னுடைய தந்தை ஜம்மு காஷ்மீரில் முதல்வராக இருந்த காலம் என்பது வரலாற்றில் பொற்காலமாகும். இருவரும் கருத்தொற்றுமையுடன் செயல்பட்டனர். காஷ்மீர் மாநிலத்துக்குப் பிரதமர் மோடியை அழைத்திருந்த போது நாங்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களைத் திரட்ட இருந்தோம். ஆனால், மோடி வரவில்லை.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இருந்த மனநிலை பிரதமர் மோடிக்கும் இருக்கும். ஜம்மு காஷ்மீர் மக்களின் குறைகளை நீண்டகால பிரச்சினைகளை மோடி தீர்த்துவைப்பார் என்று நம்பினேன். ஆனால், எதையும் மனதில் கொள்ளாமல் பி.டி.பி. கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டனர். எதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தோமோ அது ஏமாற்றமளித்தது. மக்களையும் ஏமாற்றியது. நாங்கள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன், தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எண்ணியதில்லை. ஆனால் இப்போது காலத்தின் தேவைக் கருதித்தான் அந்த முடிவை எடுத்தோம். இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து