முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகம் பின்பற்றவேண்டும் - குமாரசாமிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட தெளிவான தீர்ப்பை பின்பற்றுங்கள் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தமிழகத்திற்கு பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றாரே ?

பதில்: நான் ஏற்கனவே, ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பலமுறை தெளிவாக தெரிவித்திருக்கிறேன். 50 ஆண்டு காலமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய காவிரிப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அண்மையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தெளிவான தீர்ப்பை, காவிரிப்படுகையில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பின்பற்ற வேண்டுமென்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு.

கேள்வி: உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறதே ?

பதில்: நிராகரிக்கவில்லை, தவறான தகவல். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால் அதற்குத் தேவையான விளக்கம் கேட்டு, அதன்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கும்.

மக்களின் நலன் கருதி...

கேள்வி: எதிர்கால நலன் கருதி 8 வழிச் சாலை நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருக்கின்றீர்கள்? ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களே?

பதில்: இந்தியாவின் இரண்டாவது பசுமைவழிச் சாலை தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதி, அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நிலம் கையகப்படுத்தும்பொழுது, குறைந்த அளவில் இழப்பீட்டுத் தொகை கொடுத்தார்கள். ஆனால், இப்பொழுது அப்படியல்ல, விவசாயிகளுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதால், சாலை, உட்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியம்.

வெளிநாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பே, 8 வழிச்சாலை, 10 வழிச்சாலை என்று ஏற்படுத்தி, தொழில் வளம் பெருகி, சிறப்பான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கை தமிழகத்திலும் அமைய வேண்டுமென்றுதான் தமிழ்நாடு அரசு விரும்புகிறது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். யாரையும் பாதிப்பிற்கு உள்ளாக்குவது நோக்கமல்ல. ஆனால், மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் கடமை.

11 சதவீதம் மட்டுமே...

கேள்வி: ஏற்கனவே 4 வழிச்சாலையிலேயே எங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்களே ?

பதில்: அது தவறானது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. ஏற்கனவே, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, நீதிமன்றத் தீர்ப்பின்படி அவர்கள் வழங்குகின்றார்கள். இது இன்று, நேற்றல்ல, ஏற்கனவே, தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நில எடுப்பு, அப்பொழுது  ஒவ்வொருவரும் ஒரு வழக்கு போட்டார்கள். நிலத்தின் வழிகாட்டு மதிப்பிற்கு அதிகமாக இழப்பீட்டுத் தொகை கேட்டு நடைபெற்ற சம்பவம் அது. தற்பொழுது அப்படியல்ல, அரசாங்கம் நிலத்திற்குத் தேவையான அனைத்து இழப்பீட்டுத் தொகையையும் வழங்கவிருக்கிறது.

தென்னை, மாமரம், வீடு, நிலம் ஆகியவற்றிற்கு இழப்பீடு தருகிறோம். அரை ஏக்கர், கால் ஏக்கர் நிலம் வைத்திருந்தவந்களிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டால், வீடு கட்டுவதற்கு நிலம் கொடுத்து, அரசாங்கமே வீடு கட்டிக் கொடுக்கிறது. இதற்கு 89 சதவீத மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றார்கள். 11 சதவீதம் மட்டுமே எதிர்ப்பு  தெரிவிக்கின்றார்கள். ஒரு திட்டம் என்று வரும்பொழுது ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தித் தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து