முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி - சுஷ்மாவுடன் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீம் யுவேஸ் லி டிரியன் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீம் யுவேஸ் லி டெல்லி வந்துள்ளார். மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேற்று அவர் சந்தித்து இந்தியா-பிரான்ஸ் இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா, இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது, தனித்துவமானது என குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை கூட்டுறவை அதிகரிக்க நேற்றைய சந்திப்பின்போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர், ஜீம் யுவேஸ் லி டிரியன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து