முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரகானே நிதான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி - 2-வது நாள் முடிவில் 3/172

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பெர்த் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் நேற்று 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி தனது 20-வது அரை சதத்தையும், ரகானே தனது 17-வது அரை சதத்தையும் பூர்த்து செய்து களத்தில் உள்ளனர்.

326 ஆல் அவுட்...

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பெர்த் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் 326 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஹாரில் (70), பின்ஞ் (50), ஹெட் (58) மார்ஷ் (45) ரன்களை எடுத்தனர். இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசி இஷாந்த் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

ஆரம்பமே திணறல்

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர். முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமலும், ராகுல் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரஹானே நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 20-வது அரை சதத்தை அடித்தார். ரஹானே தனது 17-வது அரை சதத்தை அடித்தார்.

154 ரன்கள் பின்தங்கி...

2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து 154 ரன்கள் பின்தங்கி உள்ளது. விராட் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று முதல் இன்னிங்சில் 3-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து