முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020 ஆசிய கோப்பை டி-20 போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா இந்திய அணி?

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : 2020 ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதால், இந்திய அணி பங்கேற்குமா என கிரிக்கெட் ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் ஆசிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 1984-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முன்னின்று நடத்தி வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான 14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில், இந்திய அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை அடுத்து, வரும் 2020 ஆசிய கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 ஓவர்களாக நடந்தப்பட்ட இந்த தொடர், இனி 20 ஓவர்களாக மாற்றப்பட்டது.

பங்கேற்பது சந்தேகம்தான்...

கடந்த ஆசிய கோப்பை தொடரை இந்தியா நடந்தியது. ஆனால், பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதால், போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அதேபோல், 2020 போட்டியை பாகிஸ்தானில் நடத்தினால் இந்தியா பங்கேற்பது சந்தேகம்தான். அதனால், இரு நாட்டிற்கும் பொதுவான இடத்திற்கு போட்டி மாற்றப்படலாம்.இந்திய அணி பங்கேற்காமல் போனால், தொடரின் வருமானத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அதை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்ப வாய்ப்பில்லை. இதுவரை, போட்டி நடத்தப்படும் நடத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்படவில்லை. போட்டி இடமாற்றம் குறித்து பி.சி.சி.ஐ. அதிகாரிகள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து