சரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      உலகம்
Sarabjit Singh case 2018 12 16

லாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரையும் விடுதலை செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியர் சரப்ஜித் சிங்கை கொன்றதற்கான வலுவான ஆதரங்கள் இரு குற்றவாளிகளுக்கு எதிராக இல்லை என்று கூறி நீதிபதி மொயின் கோகர் விடுவித்து உத்தரவிட்டார்.
கடந்த 1990-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்தார் என்று கூறி சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். சரப்ஜித் சிங்குக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

லாகூரில் உள்ள கோட் லோக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜி சிங் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட அமித் தண்ட்பா, முடாசிர் முனிர் ஆகியோர் மீது லாகூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கின் விசாரணை நடந்து முடிந்த நிலையில், நீதிபதி முகமது மொயின் கோகார் தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட அமித், முடாசிர் ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பில் வலுவான ஆதாரங்கள் ஒன்று கூட தாக்கல் செய்யவில்லை. ஆதாரங்கள் இன்றி யாரையும் தண்டிக்க இயலாது என்பதால், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் விடுவிக்கிறேன்” என்று தீர்ப்பளித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்துக்கு வராமல், சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து