வரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
congress 2018 12 16

புது டெல்லி : வரும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடத் தயாராகிறது.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவையடுத்து  தனித்து போட்டியிட்டாலும் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக காங்கிரஸ்  தலைமைக்கு நம்பிக்கை பிறந்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்காக எந்த கட்சிகளையும் எதிர்பார்ப்பதை நிறுத்த விரும்புகிறது.

தமக்கு விருப்பமான வகையில் தொகுதிப் பங்கீடு நடந்தால் ஒழிய கூட்டணி வைப்பதில்லை என்ற மனநிலைக்கு காங்கிரஸ் மாறத் துவங்கியுள்ளது. எனவே, முதல் மாநிலமாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இது குறித்து மேற்கு வங்க மாநிலக் காங்கிரஸ் தலைவரான சோமன் மித்ரா கூறும் போது, ஆளும் திரிணமூல் காங்கிரசினரால் எங்கள் கட்சியினர் அன்றாடம் தாக்கப்படுகின்றனர். பொய்யான வழக்குகள் எங்கள் மீது பதிவாகி வருகின்றன. எனவே எங்கள் கட்சி வலிமையுடன் இங்கு மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து