முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு : மேற்கு வங்க அரசுக்கு எதிராக பா.ஜ.க. ஐகோர்ட்டில் முறையீடு?

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கு அனுமதி அளித்தால், மதக் கலவரம் உருவாகும் சூழல் ஏற்படும் என்று உளவுத்துறை அளித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அனுமதி அளிக்க மேற்கு வங்க அரசு மறுத்து விட்டது.

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் முக்கிய இடங்களில் ரத யாத்திரை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் 158 பொதுக்கூட்டங்களும், மூன்று பிரிவுகளாக ரத யாத்திரையைத் தொடங்கவும், 34 நாட்கள் தொடர்ந்து யாத்திரை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் கூட்டத்தை ஜனநாயகத்தை காப்போம் பேரணி என்ற பெயரில் கூச் பெஹர் மாவட்டத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரம் 9-ம் தேதி முடிந்தது.

இந்நிலையில், ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தவும், கூட்டங்கள் நடத்தவும் மேற்கு வங்க அரசிடம் பா.ஜ.க. சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பா.ஜ.க.வின் ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ரத யாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆதலால், ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உளவுத்துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பா.ஜ.க.வினர் மாநில அரசின் முடிவை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து