முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் ரூ. 445 கோடி செலவில் மகளுக்காக சொகுசு பங்களா கட்டி வரும் முகேஷ் அம்பானி

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : தனது மகள் இஷா அம்பானி வசிப்பதற்காக ரூ. 445 கோடி செலவில் சொகுசு பங்களாவைக் கட்டி வருகிறார் முகேஷ் அம்பானி. 

தெற்கு மும்பையில் உள்ள வொர்லி பகுதியில் இந்த சொகுசு பங்களா 50 ஆயிரம் சதுர அடியில் மிகவும் பிரமாண்டமாக அரபிக் கடலை பார்த்த வண்ணம் அதிநவீனமாக அமைந்து வருகிறது. குலிடா என பெயரிட்டுள்ள இந்த பங்களாவில் நீச்சல் குளம், நவீன ஜிம், 3டி கண்ணாடி முகப்பு என அனைத்து நவீன வசதிகளும் அமைக்கப்படுகின்றன.

இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் ஜோடிக்கு இதை திருமணப் பரிசாக முகேஷ் வழங்கவுள்ளார். பங்களா தயாரானதும் இருவரும் அந்த வீட்டில் குடிபோகவுள்ளனர். இந்த இடத்தை முகேஷ் 2012-ல் வாங்கியதாகத் தெரியவந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர் எக்கர்ஸ்லே ஓ காலகன் மேற்பார்வையில் 3 மாடிகளை கொண்டதாக இந்த சொகுசு பங்களா அமைக்கப்படுகிறது. இஷா அம்பானியின் சகோதரர் ஆகாஷ் அம்பானி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொழிலதிபர் ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து