பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் பாதுகாப்பு அதிகரிப்பு - ராஜ்நாத் சிங் பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
Rajnath Singh 09-09-2018

புது டெல்லி : மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ற தினமான நேற்று 16-ம் தேதி ஆண்டுதோறும் விஜய் திவாசாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை அதிகரித்துள்ளது. நக்சல் பாதிப்பு மிக்க மாவட்டங்கள் 90 லிருந்து 12 ஆக குறைந்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோதமாக ஊடுருவலும் 80 சதவீதம் குறைந்து விட்டது. எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்பு படையினருக்கு, பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 1971-ல் வரலாறையும், எல்லையையும் மாற்றியமைக்க நம்மால் முடியும் என்பதை இந்திய ராணுவம் நிருபணம் செய்தது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து