முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை விவகாரம்: சோனியா காந்தியிடம் வலியுறுத்த முடியுமா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் சவால்

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மேகதாது அணை விவகாரத்தை கைவிட வேண்டும் என்று சோனியாகாந்தியை வலியுறுத்துவாரா என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் சவால் விடுத்துள்ளார்.  
சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தினகரனோ, சசிகலாவோ அல்லது அவரை சாந்தவர்களை தவிர யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்வோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். எனவே மற்றவர்கள் எப்போது வேண்டுமானும் அ.தி.மு.க.வில் வந்து சேரலாம். அவர்களுக்கு வசந்தகாலம் காத்திருக்கிறது. தங்கதமிழ்செல்வன் போகாத ஊருக்கு வழி

சொல்லிக் கொண்டிருக்கிறார். அது நடக்காது. அ.ம.மு.க.வை நாங்கள் ஒரு கட்சியாகவே கருதவில்லை. அது ஒரு சிறிய கோஷ்டி. அந்த கோஷ்டிக்கும் இமயமலை போல  உயர்ந்து நிற்கின்ற அ.தி.மு.க.வுக்கும் வித்தியாசம் உள்ளது. மலை எங்கே. மடு எங்கே.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் அவரிடம்  ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வைகோ தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  நாங்கள்தான் ஆலையை மூடினோம். ஆலை இயங்கவில்லை. மூட வேண்டும் என்ற நிலையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அரசியலுக்காக அவர்கள் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். இதில் எள்அளவுக்கும் உண்மை இல்லை. எங்களைப் பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்ட மக்கள் மற்றும் தமிழக மக்களின் உணர்வை உச்சநீதிமன்றத்தில் வெளிப்படுத்துவோம் என்றார்.

இதையடுத்து கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயகுமார்,

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொறுத்தவரை அவரின் தந்தை கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மற்ற மாநில தலைவர்களை அழைத்துள்ளார். அவர்கள் வரட்டும். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. சென்னை வருகை தந்துள்ள சோனியாகாந்திடம்  கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசு மேகதாது அணை திட்டத்தைக் கை விட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூற வேண்டும்.  அப்படி எடுத்து சொல்லுவதற்கு மு.க. ஸ்டாலின் தயாரா? ஆனால் இதனை ஸ்டாலின்  சொல்ல மாட்டார். காரணம், ஏற்கனவே தமிழகத்தின் உரிமையைத் தாரை வார்த்தவர்கள் இவர்கள்.

அதே போல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமும் ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு நியாயம் வேண்டும் என்றும் எந்த நிலையிலும் தமிழர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் சொல்ல தயாரா? இதனையும் சொல்ல மாட்டார். சந்தர்ப்பவாதத்தின் உச்சக்கட்ட கூட்டணிதான் தி.மு.க. கூட்டணி.
மக்கள் குறித்து எந்தக் கவலையும் அவர்களிடம் கிடையாது. தன்னுடைய நலன் என்ற அடிப்படையில்தான் அவர்கள் கூட்டணி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து