முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பெர்த் : பெர்த்தில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டதால், அவர் மைதானத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறினார்.

பெர்த்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் விராட் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே லயன் பந்துவிச்சீல் விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ரஹானே 51 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஹனுமா விஹாரி களமிறங்கி, கோலியுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினார் கோலி அபாரமாக ஆடி 25-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.

நிதானமாக ஆடிய ஹனுமா விஹாரி 20 ரன்களில் வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ரிஷப் பந்தும் விளையாடி வந்தனர். 92-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசிப் பந்து விராட் கோலியின் பேட்டில் பட்டு சென்றது. பந்தை 2-வது ஸ்லிப்பில் நின்று இருந்த ஹேட்ஸ்கம்ப் பிடித்தார். இதற்கு கள நடுவர் அவுட் அளித்தார். ஆனால் இந்த கேட்ச் பிடித்ததில் சந்தேகம் இருந்ததைத் தொடர்ந்து மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்யப்பட்டது. மூன்றாவது நடுவர் டி.வி. ரீப்ளேயில் விராட் கோலியின் பேட்டில் பட்டு சென்ற பந்தையும், ஹேண்ட்ஸ்கம்ப் பிடித்ததையும் ஆய்வு செய்தனர். ரீப்ளே காட்சியில் பந்து தரையில் பட்ட பின்புதான் ஹேன்ட்ஸ் கம்ப் பிடித்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

மேலும், ரீப்ளேயும் ஜும் செய்தும், மூன்றாவது நடுவர்கள் பார்த்தனர். அப்போது, பந்து தரையில் பட்ட பின்புதான் ஹேன்ட்ஸ்கம்ப் பந்தை பிடித்தார் என்பது தெளிவாக அறிய முடிந்தது. இதனால், சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்குச் செல்லும் என்பதால் கோலிக்கு அவுட் அளிக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், அவுட் அளித்து மூன்றாவது நடுவர் அறிவித்ததால், விராட் கோலி ஏமாற்றமடைந்து, மிகுந்த அதிருப்தியுடனும், கோபத்துடனும் வெளியேறினார். ரசிகர்களும் உரத்த குரலில் கோஷமிட்டு தங்களின் ஏமாற்றத்தைப் பதிவு செய்தனர். மதிய உணவு நேர இடைவேளையின் போது, இந்திய அணி 93.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து