முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவலில் வரும் 18-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. அன்று நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதையொட்டி திருமலை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் நடந்தது. இதில் கலந்து  கொண்ட தேவஸ்தான அதிகாரி சீனிவாச ராஜூ பேசியதாவது,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு ஆண்டு  கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள், அங்கபிரதட்சணம் செய்வோர் திவ்ய தரிசனத்தில் அலிபிரி ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் பாதயாத்திரையாக வருவோருக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 5 மணியளவில் சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். 18,19-ம் தேதிகளில் ஏழுமலையானை வழிபட மொத்தம் 44 மணி நேரம் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18,19-ம் தேதிகளில் 24 மணி நேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். தேவஸ்தான ஊழியர்களுக்கு 2 நாட்களில் 24 மணி நேரமும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து