முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம்­ மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற கலெக்டர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்கள் பெற்று, அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.   இக்கூட்டத்தில் மொத்தம் 231 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து  மாவட்ட கலெக்டர்  கூட்டத்தில் பல்வேறு உதவித்தொகை வேண்டி கோரிக்கை மனு வழங்கிய நபர்களுக்கு உடனடி நடவடிக்கையின் மூலம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு முதியோர் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.ஆயிரம்  பெறுவதற்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக ஒரு பயனாளிக்கு செயற்கை கால் உபகரணத்தையும் வழங்கினார்.
 இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் சிரமப்படாத வகையில் அவர்களுக்கு சிறப்பு அமர்விடம் ஏற்படுத்தப்பட்டு, அவர்களிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.  மேலும், இக்கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கிய அனைத்து நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உணவு பொட்டலங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர்(பொறுப்பு) சி.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.எஸ்.கண்ணபிரான் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து